பில்லா- 2 இயக்குனர் சக்ரி டோலட்டி, யுவன் ஷங்கர் ராஜா தறிக்கும் கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. தமிழ் தெலுங்கின் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா இந்த இரு மொழி படத்திலும் நடிக்கிறார்.
இந்தியில் இவருக்கு மார்க்கெட் இல்லை என்பதால், தமன்னா நடிக்கிறார். இதில் தமன்னா நடிப்பதினாலேயோ என்னவோ, பிரபு தேவா முதன்முறையா வில்லனாக நடிக்கிறார். இந்தி ஷூட்டிங் தமன்னா , பிரபுதேவாவை வைத்து லண்டனில் நடந்து வருகிறது.
இந்த சூழலில், சக்ரி நயனிடம் பிரபுதேவா வில்லனாக ஓகேவா? என்று கேட்டாராம். அதற்கு நயன் இதனால் என்ன? ” என்று சொல்லவும் அவரை பிக்ஸ் பண்ணாராம் சக்ரி.
சிம்பு கூட, இது நம்ம ஆளுங்கிற படத்தில் நடிச்சவர் ஆச்சே, பெருந்தன்மையாக ஓகே சொல்லியுள்ளார்.
ஆனால், இது விக்னேஷ் சிவனுக்கு பிடிக்கவில்லையாம். நயன்தாராவிடம் சண்டைக்கே வந்துவிட்டாராம். முன்பே அவரை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியதையே பிடிக்கவில்லை என்று சொல்லும்போது, அவர் கூடவே நடிப்பதா? அப்படி ஏதாவது நடந்துச்சின்னா, பிரிஞ்சிடலாம்ன்னு சொல்ல, அவ்வளவு தான், நயன் சக்ரிக்கு போனை போட்டுள்ளார்.
நயன் இப்போது தான் இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் வீட்டை கட்டிக்கொண்டு உள்ளார். இந்த சூழலில், இது வேண்டாம் என்று விக்கி பிடிவாதமாக நிற்க, நயன் பிரபுதேவாவுடன் நோ ஆக்டிங் என்றுவிட்டார்.