சினிமாக்காரர்கள் ஒண்ணை பிடிச்சிட்டா அதை விடவே மாட்டாங்க. அது பேய் படமாக இருந்தாலும் சரி, த்ரில்லர் படமா இருந்தாலும் சரி. அதே போல, ஒரு டயலாக் நல்ல இருந்துச்சின்னு ரசிச்சிட்டோம், போச்சு-அதை ஏண்டா சொல்லுறான்னு நினைக்கிற அளவுக்கு திரும்ப திரும்ப பேசுவாங்க.
ஒரு விருது வழங்கும் விழாவில் என் பொண்டாட்டிக்கு தான் இந்த விருதுன்னு சூர்யா அறிவிச்சார். அதுவரைக்கும் ஜோ ஜோ ன்னு சொல்லுறவர். அப்படி சொன்னவுடன்,எல்லா சமூக வலைத்தளமும் அப்படியே எழுதுச்சு.
அதில ஆரம்பிச்சார், ஜோங்கிறதை விட்டுட்டு, என் பொண்டாட்டின்னு சொல்ல ஆரம்பிச்சார்.இப்போ இன்னைக்கு காலையில் நடந்த காற்றுவெளியிடை படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில், தன் பொண்டாட்டி கேட்டாங்கன்னு ஒரு கேள்வியை வழிஞ்சிகிட்டே மணிரத்தினம் கிட்ட கேட்டார்.
“கார்த்தி அசிஸ்டன்ட் டைரக்டரா ஆயுத எழுத்தில் மக்களை கிளியர் பண்ணார்.இன்னைக்கு அவர் ஹீரோவா இங்க இருக்கார். இந்த படத்தில் பழைய கார்த்தி இல்லை. குடும்பத்துக்குன்னு ஒரு வாட்ஸ் அப்
க்ரூப் வச்சிருக்கோம். அந்த க்ரூப்பிலே முதல்ல மீசை இல்லாத கார்த்தி ஸ்டில் வந்தவுடன், எல்லோருக்குமே ஆச்சரியம்.
என் பொண்டாட்டி, உங்ககிட்ட ஒண்ணு கேக்க சொன்னார். புதுசு புதுசா அந்த லவ், ரொமான்ஸ், ஐடியாஸ் எல்லாம் எங்கிருந்து வருதுன்னு மணிரத்தினம் கிட்ட கேக்க சொன்னாங்க. ” என்று வழிந்துகொண்டே பேசினார்.