ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.0’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் அவரது சொந்த படநிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
புதிய படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து தீபிகாபடுகோனே நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அடுத்தபடத்தில் ரஜினி ஜோடி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
அதே நேரத்தில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பா.ரஞ்சித் இந்த படத்தக்கான முதல் கட்ட வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். ‘2.0’ படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது.
எனவே, அடுத்த மாதம் 14-ந் தேதி ரஜினியின் புதிய படம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் ரஜினி புதிய படத்துக்கு தயாராகி விடுவார் என்று கூறப்படுகிறது.