முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும் அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக தீபா பேரவை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் சிலர் கூறியதாவது: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் நியமனத்தில் அவரது கணவருக்கும் மற்றும் தீபா டிரைவர் ராஜா ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.
இதனால் மனைவி தீபாவின் செயல்பாடு பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி மாதவன் பேட்ரிக் ஓட்டல் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கி வருகிறார்.மேலும், மாதவன் பேட்ரிக் புதிய கட்சியை துவங்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றார். இதனை ஏற்க மறுத்த தீபா பேட்ரிக்கை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கணவருடன் ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்து மீண்டும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று தீபா ஆதரவாளர்கள் கணவர் பேட்ரிக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தீபா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையில் விரிசல் அதிகரித்துள்ளது. மேலும் சமரசம் பேச வந்தவர்களை தீபா அடிக்காத குறையாக விரட்டியதாகக் கூறப்படுகிறது.