Loading...
அஜித்தின் வீரம் படம் பவர் ஸ்டார் நடிக்க கடமராயுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு உரிமையை வாங்கியிருக்கும் நாகா மூவிஸ் நரேந்திரன், பட வரவேற்பு குறித்து பேசும்போது, இது எல்லாமே அஜித் ரசிகர்களால் தான். இது ரீமேக்காக இருந்தாலும் அவர்கள் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்ய எங்களுக்கு நிறைய விதத்தில் உதவி செய்து வருகின்றனர்.
Loading...
பவன் கல்யாணுக்கு ரசிகர்கள் இங்கு இருந்தாலும், அஜித் ரசிகர்கள் படத்தை காண மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இந்த இரண்டு விஷயங்களை வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் படம் நல்ல வசூல் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading...