தேவையான பொருட்கள் :
உதிர்த்த சோளம் – 100 கிராம்
மஷ்ரூம் – 150 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப்பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1/2 கப்.
செய்முறை :
* மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி போட்டு வதக்கி நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம், உதிர்த்து வைத்துள்ள சோளம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் சிறிது நீர் தெளித்து தேவையான அளவு உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
* நன்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* சூப்பரான கார்ன் மஷ்ரூம் மசாலா ரெடி.