2017ஆம் ஆண்டுக்கான அதியுயர் விருது வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரைத் தடாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
12 வருடங்களின் பின்னர் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்வில் 13 தமிழ், முஸ்லிம்கள் அடங்களாக 89 பேருக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, மறைந்த கலாநிதி பண்டித் அமரதேவவிற்கு இலங்காபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் தவநேசன் நேசய்யா, அலி அக்பர் அலி உட்பட 10 பேருக்கு தேசமானி விருதுகளும் வழங்கப்பட்டன.
தேசபந்து விருது, தேவநாயகம் உட்பட 9 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் 11 பேருக்கு வித்தியாஜோதி விருதும் வழங்கப்பட்டது.
மேலும், கர்தினி ரஹ்மான் மொஹமட், சரவணை விநாயகமூர்த்தி மற்றும் எஸ்.தில்லைநடராஜா உட்பட்ட 22 பேருக்கு கலாகீர்த்தி விருதுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ லங்கா சிகாமணி விருது கே.ரத்னம் ரவீந்திரன், சிவசுப்ரமணியம் பத்மநாதன், அச்சி மொஹமட் இஷாக் உட்பட்ட 7 பேருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை எம்.செல்லமுத்துப்பிள்ளை மூக்கையா, சிவலிங்கம் சிவானந்தன், பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம், அஹமட் மும்தாஸ் மசூன் காசிம் உட்பட 10 பேருக்கு வித்யாநிதி விருது வழங்கிவைக்கப்பட்டது.