அமெரிக்காவுடனான எந்த வகையான போரையும் எதிர்கொள்வதற்கான போதிய செயற்திறனுடன் வடகொரியா திகழ்வதாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி ஊடகமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.
தென்கொரியா மற்றும் அமெரிக்க படைகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து செயற்படுமாயின், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவின் குறித்த எச்சரிக்கைக்கு கண்டனத்தை வெளியிட்ட வடகொரியா, அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது என அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜாங்க செயலாளராக ஆசியாவிற்கான தனது முதல் விஜயமாக ஜப்பான் சென்றுள்ள டில்லர்சன், வட கொரியாவிற்கு எதிரான புதிய அணுகுமுறைகளை கையாள்வது தொடர்பில் தென்கொரியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.