Loading...
வாகன முறைகேடு தொடர்பில் கைதாகியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்சவால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த மனு நிராகரிக்கப்பட்து.
Loading...
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...