யாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழத்தின் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் ஒரு கிலோ வாழைப்பழம் நூறு ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
யாழ். குடாநாட்டின் பல்வேறு ஆலயங்களிலும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகியுள்ளமையும், பங்குனித் திங்கள் போன்ற இந்துக்களின் புனித விரத்தினங்கள் ஆரம்பித்துள்ளமையுமே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணமென வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கதலி வாழைப்பழத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதும் ஒரு கிலோ இதரை வாழைப்பழம் 50 ரூபா முதல் 60 வரையே விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.