Loading...
சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் பல பூச்சுக்களை போத்தல்களில் அடைத்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
கைது செய்யப்பட்ட ஏனையோர் சாஸ்திரம் பார்போர் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
Loading...