Loading...
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்தவின் கொலையுடன் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் சம்பந்தம் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
Loading...
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கோத்தபாய ராஜபக்ச மேற்கண்ட மறுப்பை வெளியிட்டுள்ளார்.
தான் ஏதேனும் புலனாய்வு படைப் பிரிவுடன் சம்பந்தப்பட்டிருப்பதை சரத் பொன்சேகா அறிந்திருப்பாரேயானால், அன்றைய இராணுவத் தளபதி என்ற வகையில் எந்த காரணத்திற்காக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனவும் கோத்தபாய கேள்வி எழுப்பியுள்ளார்
Loading...