விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வெளிவரும் கருத்துக்களால் தற்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே நாம் அறிந்துள்ளோம்.
எனினும், பழ நெடுமாறன் மற்றும் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் வே.பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அடித்து கூறுகின்றனர்.
இவர்களின் கருத்தில் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்திரை வெளியேற்றக்கூடாது.
அத்துடன், இராணுவ முகாம்களை கூட அகற்ற கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின ஊடகப் பேச்சாளர் நிசாந்த வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.