இனிப்பு வகைகளுக்கான சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மல்வான அல் முபாரக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்துகொண்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிஸ்கட் மற்றும் இனிப்பு வகைகளை தாயரிக்கும் நிறுவனங்களிடம் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இனிப்பு வகைகளுக்கான சீனியின் அளவை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்ட போது பல அழுத்தங்கள் வந்தது. அதற்கு எல்லாம் நான் பயம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரவக் கூடிய நோய்களின் கட்டுப்பாட்டை சீனி,உப்பு போன்றவற்றை குறைப்பதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.