Loading...
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா ஒருபோதும் இணைந்துகொள்ளாது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
Loading...
நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இணங்காது.
அத்துடன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளும் ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா இன்னமும் இணைந்துகொள்ளவில்லை.
இந்த உடன்பாட்டில் சிறிலங்கா இணைந்துகொள்ளவேண்டுமென ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...