காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (21-03-17) நடைபெற்றது.
இதில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஆர். ஜே.பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான பேசியது , இயக்குநர் மணிரத்னம் சார் எனக்கு கிடைத்தது ஒரு வரபிரசாதம் எனலாம்.
நான் மணிரத்னம் சார் அவர்களை பார்க்கவில்லை என்றால் வைரமுத்து சார் மற்றும் இன்று நான் இருக்கும் இடம் எனக்கு கிடைத்திருக்காது.
அவருடன் வேலை பார்ப்பது ஒரு டிவைனான அனுபவம் எனலாம் என்றார்.
விழாவில் சூர்யா பேசியது, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் இருந்து வந்த சின்ன தயாரிப்பு நான் , நான் ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிக்கும் போது படபிடிப்பு தளத்தில் கூட்டத்தை விளக்கி கொண்டு இருந்த கார்த்தி இப்போது அதே மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடித்துவிட்டான் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும்.
இப்போது கார்த்தியின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது.
கார்த்தியை இதை போல் நான் பார்த்ததே இல்லை, வீட்டில் அனைவருக்கும் கார்த்தியை இந்த இடத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
மணி சார் இந்த படத்தில் வேறு ஒரு கார்த்தியை நமக்கு காட்டியுள்ளார். கார்த்தி இந்த படத்தில் நடித்துள்ளது புதியதொரு கதாபாத்திரம்.
நான் மணி சாரிடம் ஒன்று கேட்டு கொள்ள விரும்புகிறேன் எப்படி சார் இன்னும் அழகான காதல் கதைகள் உருவாக்கி கொண்டு வருகிறீர்கள், நான் வீட்டில் இன்னும் பொண்டாட்டி என்ற வார்த்தை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.