புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். வங்கிச் சேமிப்பு உயரும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கனவு பலிதம் உண்டு. கட்டிடம் கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பிரியமான சிலரிடம் யோசித்து பேசும் சூழ்நிலை உருவாகலாம். மறதியால் சில காரியங்களைச்செய்ய இயலாது.
மாலை நேரம் மனக்கலக்கம் ஏற்படும் நாள். யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்படுவது நல்லது. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.
லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இனத்தார் பகை மாறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
பிரியமானவர்களோடு ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு.
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் கருதி புதிய பணியாளர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.
இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். அரசு வழி சலுகை கிட்டும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர்.
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பயணத்தால் விரயம் உண்டு. ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. பயணம் பலன் தரும்.
லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கை கூடி வரும்.