அருண் விஜய் – மகிமா நம்பியார் இணைந்து நடித்த `குற்றம் 23′ படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிமாவுக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
`குற்றம் 23′ படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகிமா, படம் முழுக்க அழகிய தோற்றத்தில் வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படும்படி இருந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் மகிமாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், தனது அடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தில் மகிமா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும் பேசப்படுகிறது. இப்படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு தயாரிக்க உள்ளார்.
ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு, இரவில் எடுக்கப்படும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை காட்டும் படியாக உருவாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 25-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.