Loading...
மதுரை: தனுஷ் உடலில் உள்ள சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி தனுஷ் தங்கள் மகன் என கூறினர். மேலும் இது தொடர்பாக மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Loading...
அதில் தங்களின் மூத்த மகனான கலையரசன் 16 வயதில் காணாமல் போனதாகவும், அவர் தான் தனுஷ் என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கதிரேசன், மீனாட்சி தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
Loading...