ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அந்த இடத்திற்கு விரைந்த அவர்கள், குறித்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
இது குறித்து வெளியான தகவலின்படி,
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டனர்.
இதேவேளை மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் ஆணினுடையது என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், இறந்து நீண்ட நாட்களாகியிருக்க கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இது கொலையா அல்லது தற்கொலையா என்கிற விடையம் வெளியாகவில்லை. இருப்பினும் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை வந்தவுடன் இது குறித்து மேலதிக தகவல்களை பெற முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.