அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு டொம்னிக் என பெயரிட்டனர். அந்த குழந்தை தாயின் கருவில் இரட்டைக்குழந்தைகளாக உருவானது.
அதில் ஒரு குழந்தை சரியாக வளரவில்லை. அதன் பாகங்கள் தற்போது பிறந்துள்ள பெண் குழந்தையின் உடலில் கால்கள் போன்றும், கைகள் போன்றும் ஒட்டிக்கொண்டிருந்தன.
அவ்வாறு வளர்ந்த தேவையற்ற பாகங்களை சிகாகோவில் உள்ள அட்வகேட் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.
முதுகு மற்றும் தோள் பட்டையில் இருந்த தேவையற்ற பாகத்தை அகற்றும் பணியில் 5 டாக்டர்கள் ஈடுபட்டனர். இது ஒரு ஆபத்தான ஆபரேசனாக இருந்தது.
ஏனெனில் தேவையற்ற பாகங்கள் குழந்தை டொமனிக்கின் தண்டு வடம் மற்றும் கழுத்து, தொண்டை பகுதியில் எலும்புடன் ஒட்டிய நிலையில் இருந்தது. எனவே அவற்றை அகற்றுவதற்கு மிகவும் துல்லியமாக ஆபரேசன் செய்தனர். இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது குழந்தை டோம்னிக் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற வருகிறாள் விரைவில் அவள் திரும்புவார்.