விஜய்யின் அடுத்த படமான 61 அறிவித்ததில் இருந்தே ஏதாவது ஒரு தகவல் அந்த படத்தை பற்றி வந்துகொண்டே இருப்பது சகஜமாகிவிட்டது.
இதனால் மனம் வெறுத்துப்போன இந்த படத்தின் இயக்குனர் அட்லீயும்’கொஞ்சம் சும்ம்மா இருங்க சார்ன்னு’ சொல்லியும் பார்த்துட்டார். ஆனால், ஒரு ஹீரோயின் அவசரப்பட்டு உளறிக்கொட்ட அதுவும் செய்தியாகி விட்டது.
இன்னும் 5 நாட்களில் இரண்டாவது செட்யூல் முடியும் தருவாயில் உள்ள இந்த படத்தில் விஜயும் காஜல் அகர்வாலும் ஒரே வேலையில் இருக்கிறார்கள் என்று காஜல் சொன்னார்.
முன்பு, ஜில்லாவில் இரண்டு பேரும் போலீசாக இருந்தது போல, இப்போ என்னவாக இருப்பாங்க? கம்பியூட்டர் என்ஜினீயர் , டாக்டர், லாயர்…என்னமோ போங்க ஜி! எப்படியும் அட்லீ ஏதாவது ஒரு படத்தை உல்டாதான் செஞ்சிருக்கப்போறாரு.
அது சரி, இப்போ இன்னொரு லீக் என்னென்னு கேட்கறீங்களா ?
சத்யராஜ் , இப்போதெல்லாம் ரொம்ப தேர்ந்தெடுத்து படங்கள் பண்ணுகிறார். நண்பன் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் விஜய்க்கு ப்ரொபஸராக நடித்தவர். தலைவாவில் விஜய்க்கு அப்பாவாக நடித்தார். இந்த படத்திலும் சத்யராஜ் நடிக்கிறார் என்பதுதான் தகவல்.