நம் அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களில் ஒன்று நீர். நீர் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிரும் வாழ இயலாது.
1993-ம் ஆண்டு முதல் மார்ச்-22 ம் நாள் உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
2040-ம் ஆண்டில் 4-க்கு 1 குழந்தையானது தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் எனவும், இன்னும் 20 ஆண்டுகளில் 60கோடி மக்களுக்கு கடும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் எனவும் யுனிசெஃப் ஆனது கூறியுள்ளது.
மேலும், நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றினால், தெற்கு ஆசியாவில் கடும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியோப்பிய, தெற்கு சூடான், சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் 9 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் 36 நாடுகளில் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. கிராம புறங்களில் வசிக்கும் 6கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.