நேற்று ராத்திரி ஒரே வதந்தி. நம்ம த்ரிஷா ஹாஸ்பிடலில் அட்மிட் என்று ஒரே கலவர பூமியானது சமூக வலை தளம்.
சுசி லீக்ஸுக்கு அப்புறம் வெளியிலேயே வராத த்ரிஷா, இப்போது இந்த செய்தி மூலம் மீண்டும் வைரல் ஆனார். இந்த வருடம் அம்மணி கையில் சாமி2, சதுரங்க வேட்டை2, மோகினி,கர்ஜனை,96,ஹே ஜூட்,1818 என்று அரை டஜனுக்கும் மேல படங்கள்.
அம்மணி ராத்திரியும் பகலுமா ரொம்ப பிசி. இந்த நேரத்தில் தான் இந்த வதந்தி.
த்ரிஷா ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததாகவும், அவருக்கு புட் பாய்சன் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும் தகவல்கள் வைரலாக பரவியது.
அதுக்கு அவுங்க அம்மா உமா கிருஷ்ணன்,’என் பொண்ணு இப்போ சதுரங்க வேட்டை 2 படத்துக்காக மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளார். அரவிந்த்சாமி, த்ரிஷா இருவரின் காம்பினேஷன் ஷூட் போயிட்டு இருக்கு, இது சும்மா போங்கு தகவல்” என்று சொல்லிவிட்டார்.
சென்னையில் இருந்தவரை , தயாரிப்பாளர் மனோபாலா அனுப்பிய செட்டிநாடு கத்திரிக்காய் முதற்கொண்டு ட்வீட் பண்ணவர் இப்போ, ஆளையே காணுமேன்னு யாராவது கிளப்பி விட்டு இருப்பாங்க…