வாகன மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார்.
விமல் வீரவன்சவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை கோரிய மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாக விமல் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.