தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி, விஜய் நடித்த `கத்தி’ படத்தின் ரீமேக்கான `கைதி எண் 150′ என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிகருமான பவண் கல்யாண், அஜித் நடித்து கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட்டான ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.
தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள இந்த படத்தை கிஷோர் குமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து பவண் கல்யாண், திரிவிக்ரம் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அஜித்தின் `வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளார்.
வேதாளம் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து முடித்த பிறகு அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகி சூப்பர்ஹிட்டான `தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவண் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.