Loading...
ஆண்கள் தங்களின் சருமத்தை எப்போதும் அழகாகவும், இளமையாக வைத்துக் கொள்ள அருமையான அழகு குறிப்புகள் இதோ!
Loading...
ஆண்கள் சருமத்தை அழகாக்க என்ன செய்ய வேண்டும்?
- ஆண்களில் சூடான உடலைக் கொண்டவர்கள், தலைக்கு நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயும் குளிர்ச்சியான உடல்வாகைக் கொண்டவர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம்.
- ஆண்கள் இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளித்து வந்தால், பொடுகு பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.
- இளம் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பிக்கும் ஆண்கள் விட்டமின் C அதிகம் உள்ள பழங்கள் மற்றும் பாதாம் பருப்பு போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால், நன்றாக முடி வளரும்.
- ஆண்கள் சந்திக்கும் பிரச்னையில் மிகவும் முக்கியமான ஒன்று தான் முகப்பருக்கள் இது போன்ற பிரச்சனைகளை தடுக்க கொழுப்புச்சத்து மிகுந்த உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- ஆண்களில் சிலருக்குக் குதிகால் வெடிப்பு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளை தடுக்க நன்றாகத் தண்ணீர் குடிப்பதுடன், வாரம் ஒருமுறை சுடு தண்ணீரில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து, பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
- ஆண்கள் வெளியில் செல்லும் போது, முகம் மற்றும் கைகளுக்கு சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சருமமாக இருந்தால், சன் ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தக் கூடாது.
- ஆண்கள் பேஷியல் செய்வதை விட வெந்நீரில் நீராவி பிடிப்பதால் முகம் புத்துணர்ச்சி அடைவதோடு, வறண்ட சருமம் தடுக்கப்படுவதோடு, முகம் பிரகாசமாகவும் இருக்கும்.
- ஆண்கள் இரவில் சருமத்தைப் பொலிவாக்கும் பழங்களை அதிகம் சாப்பிடுவது, இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை, பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுவது இதன் மூலம் உதடு கருமை அடையாமல் தடுக்கலாம்.
Loading...