Loading...
சிவன் தன் தலை, கழுத்து, கைகளில் ஆபரணமாக பாம்பினை அணிந்துள்ளார். இதற்கு விசேஷகாரணங்கள் உண்டு. மனிதனுக்கு கண், மூக்கு, வாய், செவி, மெய் எனும் ஐம்புலன்கள் உள்ளது.
இவை தீய வழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றினை அடக்கி நல்வழியில் செலுத்திவிட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறிவிடும்.
Loading...
இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்து தலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனையும் குறிக்கும்.
இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தினை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.
Loading...