அனிருத்துக்கு இப்போ எல்லாமே விசேஷம் தான். 27 வயசுதான் ஆகுது. அனிருத்துக்கு சர்ச்சை மேல் சர்ச்சை. விருது மேல் விருது. 21 வயசில, தன் அத்தை மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த வாய்ப்பினால், 3 படத்துக்கு ஒரு பாட்டை போட்டார்.
வொய் திஸ் கொலைவெறி என்ற அந்த பாடல் வைரல் ஆகி, ஒரு பெரிய ம்யூசிக் டைரக்டராக ஒரே படத்தில் கொண்டாடப்பட்டார். அதன்பிறகு அனிருத்துக்கு வந்த வாய்ப்புகள் எல்லாமே சூப்பர் தான்.
அஜித், விஜய் என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைக்க, இன்னொருபுறம் லவ், பாலியல் சர்ச்சை என்றும் வளர்ந்துகொண்டே வந்தார்.சமீபத்தில், சுசி லீக்சில் கற்பழிப்பு குற்றச்சாட்டே வந்துவிட்டது.
இப்போது அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்று படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு உள்ளார்.
இந்த சூழலில் தான் அனிருத்தை பார்க்க நேற்று திடீர் விசிட் அடித்துள்ளார் ரஜினி.
ஏன் என்ற காரணம், அவர் தரப்பில் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
இது வரைக்கும் அனிருத் 2 காதல் செய்துள்ளார். அது இல்லாமல், இந்த சுசி லீக்ஸ் படங்கள் , வீடியோக்கள் மேலும் வரும் என்ற பயமும் எல்லோரிடமும் இருக்கிறது.
அனிருத்துக்கு கல்யாணம் செய்துவையுங்கள் என்று ஏற்கனவே ரஜினி, அனிருத்-ஆண்ட்ரியா விவகாரத்தின் போதே சொன்னார்.
இப்போது மிக தீவிரமாக, பெண் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் குடும்பம் அவருக்கு சப்போர்ட்டாக இருந்து, அவரின் இமேஜை தூக்கி நிறுத்த ரஜினி விசிட் தேவைப்பட்டு இருக்கிறதாம்.