ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் முகாமிட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றி வருகின்றனர்.
வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, மயூரன், அனந்தி சசிதரன், எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் ஜெனீவாவில் முகாமிட்டு பாதிக்கப்பட்டு்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவை அமர்களிலும் விசேட உப குழுக் கூட்டங்களிலும் உரையாற்றி வருகின்றனர்.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஜெனீவாவில் முகாமிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையின் பல்வேறு அமர்வுகளிலும், ஸ்ரீலங்கா மனித உரிமை நிலைமை தொடர்பான விசேட உப குழுக் கூட்டங்களில் இவர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்து வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ரீலங்காவுக்கு மனித உரிமை பேரவை கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.