Loading...
நாய்களை வளர்த்து வீதிகளில் அலயவிட்டால் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா அபராதமும், இரண்டு வருடகால சிறை தண்டனையும் விதிப்பதற்கான ஆலோசணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நாய்கள் பதிவிற்கான 1991 ஆம் ஆண்டின் 25ஆவது சரத்தில், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்ட, புதிய சட்டதிருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading...
பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாய்களை பொது இடங்களில் திரியவிடும், குற்றத்திற்காக குறித்த நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா அபராதமும், இரண்டு வருடகால சிறைவாசம் அளிப்பதற்கான தீர்மானம் ஏகமானதாக அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...