குழந்தை ஒன்று ஏலியன் போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்ததால், தாய் குழந்தைக்கு பால் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த திங்கட் கிழமை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கதிகார் பகுதியைச் சேர்ந்த கலிதா பேகம் என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதேவேளை குழந்தை பிறந்ததும் குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இந்த குழந்தையை எடுத்துச் சென்றுவிடுங்கள், எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் குழந்தை பிறக்கும் போதே ஹார்லேகுயின் இக்தியோசிஸ் என்ற நோயின் தாக்கத்தால் பிறந்துள்ளது. இதனால் குழந்தை காண்பதற்கு ஏலியன் போன்று இருந்துள்ளது.
மேலும் இக்குழந்தை பார்ப்பதற்கு சிறியதலை, வீங்கிய கண்கள் மற்றும் தடித்த தோல்கள் என பல்வேறு பிரச்சினைகளுடன் பிறந்துள்ளது. காண்பதற்கு சற்று பயத்துடனே இருந்துள்ளது. இதன் காரணமாகவே குழந்தையின் தாயார் அதிர்ச்சியடைந்து தாய் பால் தர மறுத்துள்ளார். இதனையடுத்து இப்படி ஒரு குழந்தை பிறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஒரு சிலர் இது கடவுள் என்றும் ஒரு சிலர் இது இந்து மத கடவுளான ஹனுமான் என்று கூறியுள்ளனர். அதன் பின் அவர் சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.