Loading...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் வென்றது.
3 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 2-வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டில் வென்றது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஹேமில்டனில் தொடங்குகிறது.
நியூசிலாந்து வீரர்டிரென்ட் போல்ட்
Loading...
இந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பரும், முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான குயின்டன் டிகாக் ஆடுவது சந்தேகமே. வலது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடுவது கேள்விகுறியே.
இதேபோல நியூசிலாந்து வேகப்பந்து வீரர் டிரென்ட் போல்டும் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம்.
Loading...