அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அந்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று லாஸ் ஏஞ்சல்ஸில் இதுபோன்ற ஒரு போராட்டத்தில் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான Dianne Feinstein என்பவர் பங்கேற்றுள்ளார்.
அப்போது, ‘ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளை எப்படி தடுப்பது?’ என போராட்டக்காரர் ஒருவர் செனட் உறுப்பினரிடம் கேட்டுள்ளார்.
இக்கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, ‘நீங்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.
நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னர் விரைவில் அவரே தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவார். இது நிச்சயமாக நடக்கும்’ என பதிலளித்துள்ளார்.
மேலும், டொனால்ட் டிரம்ப் ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணங்கள் என்ன? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ‘அமெரிக்க ஜனாதிபதியாக இருந்துக்கொண்டு ரஷ்யா நாட்டுடன் டிரம்ப் ரகசிய உறவு வைத்துக்கொண்டுள்ளார். இது அமெரிக்க ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்.
சமீபத்தில் டிரம்பின் மகன்களான Donald Jr மற்றும் Eric ஆகிய இருவரும் துபாய் நகரத்திற்கு சென்று அங்கு நவீன வசதிகள் கொண்ட golf விளையாட்டு கிளப்பை சொந்தமாக திறந்துள்ளனர்.
தன்னுடைய சொந்த தொழில் வளர்ச்சிக்காக மகன்களை அரசாங்க செலவில் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். இவை அனைத்தும் ஜனநாயக விரோதப் போக்கு தான்.
அமெரிக்கா முழுவதும் உள்ள எதிர்ப்பு பலமடைந்து விரைவில் டிரம்ப் தனது பதவியை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்படும் என Dianne Feinstein தெரிவித்துள்ளார்.