நடிகை ரம்பா ஈழத் தமிழ் செல்வந்தர் ஒருவரை மணம் முடித்து கனடா சென்று குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் நடிப்பில் ஆசை வரவே அவர் கணவரை விட்டு பிரிந்து பிள்ளைகளோடு சென்னை வந்து குடியேறினார். மீண்டும் நடிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி சில தயாரிப்பாளர்கள், ரம்பாவை கை கழுவி விட்ட நிலையில். தன்னால் தனியாக பிள்ளைகளை பராமரிக்க முடியாது என்று கூறி அவர் சென்னை நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.
முதலில் கணவரிடம் இருந்து பெரும் தொகைப் பணத்தை கோரி வழக்கு போட்ட அவர். குறித்த வழக்கு தனக்கு சாதகமாக அமையாது என்று அறிந்துகொண்டு. கணவரோடு தன்னை சேர்த்து வைக்குமாறு கோரினார். இதால் அவரது கணவர் கனடாவில் இருந்து சென்னை வந்து. நீதிமன்றில் ஆஜராகினார். அவர் தான் ரம்பாவுடன் பேசி, ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அத்தோடு தான் ரம்பாவை பிரியவில்லை என்றும். அவரே தன்னை பிரிந்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
பிள்ளைகள் மீது தாம் உயிரையே வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இருவரும் பேசி கவுன்சில் முன்னார் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் திரிவித்துள்ளது.