15 வயதுடைய பாடசாலை மாணவியை 55 வயதுடைய நபர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் மஸ்கெலியாவில் பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதிலும், வழக்கு விசாரணை முறையாக செய்யப்பட்டாமல் சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சந்தேகநபர் செல்வம் மிக்கவர் என்பதாலேயே முறையான விசாரணையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மாணவி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஸ்கெலியா பகுதியில் உள்ள ஏழை குடும்பம் ஒன்றிலேயே குறித்த மாணவி பிறந்துள்ளார்.
மாணவியின் தாயார் கோழிப் பண்ணை ஒன்றில் தொழில் புரிகின்றார்.
தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி, விறகு தேடுவதற்காக காட்டிற்குச் சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்திலேயே மாணவியை சந்தேகநபர் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சந்தேகநபரை ஹற்றன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது வழக்கு முறையான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏழை என்பதாலோ தமக்கு இந்த அநீதி, சந்தேகநபர் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறும் என குறித்த பாடசாலை மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கு இணங்க, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.