இளையதளபதி விஜய், அட்லீயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார். இந்த படத்தில் ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வகையில் ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை பரவி வருகிறது. அது என்னவென்றால், கதைப்படி தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள் என்று கூறப்படுகிறது. மற்றபடி கதையில் நாம் வழக்கமாக பார்த்த விஷயங்கள் தான் இடம்பெற்றிருக்கிறதாம்.
ஆனால் முக்கியமான சமூக பிரச்சனை மற்றும் மேக்கிங் ஆகியவை ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியதால் படக்குழு கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறது. தற்போது படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படப்பிடிப்பில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து வருகின்றனர்.