அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மூலம் 2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கு, அனுமதியளிக்கும் திட்டப்பத்திரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
குறித்த பிரேரணை மூலம் 2033 ஆம் ஆண்டு, மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாகவும், 19.5 பில்லியன் டொலர்களாக இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி ஒதிக்கீடானது, அடுத்த வருடமுதல் 27.1 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதோடு மட்டுமின்றி, விண்வெளி ஆய்வுகள், ஒரியன் விண்கலத்திற்கான திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு நாசா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக விண்வெளியிற்கு மனிதர்களை அனுப்புவது குறித்து, விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது. அத்தோடு 2030ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் அல்லது அதன் மேற்பரப்பில், மனிதர்கள் செல்ல ஏதுவான நீண்ட கால திட்டத்தினை வகுக்கவும், அத்திட்டத்திற்கான விண்கலத்தை உருவாக்கவும், நாசாவுக்கு டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.