முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் கம்பஹா மல்வானை வீடு மற்றும் காணி தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று பூகொடை நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.
மல்வானை பகுதியில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி குற்றத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்றுவந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த வீடு மற்றும் காணி ஏலத்தில் விடப்படவிருந்த நிலையில், அதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த காணியின் பெறுமதி ஒரு கோடி 80 இலட்சம் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.