மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வங்காள விரிக்குடாவை சூழ்ந்த மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான அறிவியல் ரீதியான மதிப்பீடு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
வங்காள விரிக்குடாவை சூழவுள்ள கடற்பிராந்தியம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவின் நொட்ரிடடேம் பல்கலைக்கழகமும் நாரா நிறுவனமும் அறிவியல் ஆய்வுக்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
2017 ஆம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வங்காள விரிக்குடாவின் பரப்பளவை ஆய்வு செய்த, பருவமழைக்காங்களில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் மகிந்த அமரவீர கைச்சாத்திட உள்ளார்.