இலங்கை விடயத்தில், ஐ.நா மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என நான் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம் கொடுப்பது பிழை என்றே கூறுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா இலங்கைக்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் கொடுக்கலாம் எனவும் கால அவகாசத்தை கொடுக்கவே கூடாது எனவும் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளீர்களே இதில் எந்த நிலைப்பாடு சரியானது ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியுள்ளனர்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐ.நா இலங்கை விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என நான் கூறவில்லை. கொடுப்பது பிழை என்றே கூறுகின்றேன். அதாவது நான் இருமுறை தெரிவித்ததும் ஒன்று தான் அதாவது கால அவகாசம் கொடுப்பது பிழை என்றே கூறியுள்ளேன்.
இந்த விடயத்தில் சில உலக நாடுகளின் எதிர்ப்பிற்காக கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதனையே அடித்த கட்டமாக கூறியுள்ளேன்.
கால அவகாசம் கொடுக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. இதில் அடுத்த கட்டம் இதில் என்ன இடம்பெற்றுள்ளது என அறிந்து அவற்றிற்கு பதில் வந்த பின்பே அடுத்த கட்டத்திற்கு போகலாம்.
இங்கே ஒன்றுமே நடக்காமல் அரசியல் ரீதியாக கொடுப்பது பிழை என்றே கூறினேன். அதாவது கொடுப்பது என ஓர் கட்டத்திற்கு வந்தால் 6 மாதத்திற்கு மேல் கொடுக்க கூடாது. ஒவ்வொரு மாதமும் கண்கானிப்பு இடம்பெறவேண்டும்.
இவை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஐ.நா ஆணையாளருக்கு நான் அனுப்பிய ஓர் கடிதம் உண்டு அதன் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்று நாளை வெளியிடப்படும் என சீ.வி.விக்னேஸ்வரன் இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.