Loading...
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் ராணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜோமான் டி.ஜான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.
Loading...
முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியாகிய “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலும் வெளியாக உள்ளது. “நான் பிழைப்பேனோ” என்ற வரிகளில் தொடங்கும் இப்பாடலை வருகிற 25-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குநர் கவுதம் மேனன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். எனினும் `கிடாரி’ படத்திற்கு இசையமைத்த தர்புகி சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Loading...