Loading...
உளவியல் ரீதியான அபிவிருத்தியின் மூலமே நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார்.
பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான தேசிய கட்டமைப்பொன்று உருவாக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டாகின்றபோது இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
Loading...
இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தை பாடசாலைகளில் இருந்தும் சமய நிறுவனங்களிலிருந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சமூக பொருளாதார அபிவிருத்திக்கு சிறந்த மனநிலை அவசியமானதாகும்.
பேராசை போன்றவற்றை விடுத்து நாட்டின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைவார்களாயில் அபிவிருத்தியடைவது கஷ்டமான காரியாமாது என பிரதமர் குறிப்பிட்டார்.
Loading...