சென்னை ஆர்.கே.நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா மரியாதை செலுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ம் திகதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் தனது வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் சசிகலா அணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர். திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக என பலமுனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.