Loading...
லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்தார்.
லண்டன் நாடாளுமன்றம் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், 40 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
Loading...
இதற்கிடையில், இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்கும் விதமாக, பாரிஸில் உள்ள ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படும் என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்தார்.
Loading...