உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலரின் மூலம் யாழில் 2 பாரிய வீதிகள் புனரமைக்கப்பட உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஜோனி தலைமையில் யாழ் நகரின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்,
உலக வங்கியின் நிதி உதவியுடன் நகர அபிவிருத்தி அமைச்சினால் யாழ்.மாநகர தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த நிலையில் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், இந்த மாவட்டத்திலுள்ள இரண்டு பாரிய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
போக்குவரத்து பிரச்சினை, வடிகான்கள், குளங்கள் புனரமைப்பு, வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் திட்டம் என்பனவும் குறித்த நிதி மூலம் சீர்செய்யப்படவுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பிரதம செயலாளர் பத்திநாதன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.