Loading...
கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது அஜித் படம் ரிலீசாகி, ஆனால் இன்னமும் அஜித் ரசிகர்களிடையே இருக்கும் அந்த வெறி குறையாமல் இருக்கிறது. இயக்குனர் சிவாவுடன் அஜித் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் 3வது படம் “விவேகம்”.
கிட்டத்தட்ட 90 சதவித படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில் 45 நாட்கள் கடைசி படப்பிடிப்புக்காக தற்போது படக்குழுவினர் பல்கேரியாவில் பிசியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் விவேகம் படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு என்பது வெளியாகியுள்ளது.
விவேகம் படத்துக்காக அஜித்துக்கு 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் தான். ஆனால் அவர்களின் சரியான சம்பளம் தெரியாமலிருந்த நிலையில் தற்போது அஜித்தின் சம்பளம் 25 கோடி என்பது தெரிய வந்துள்ளது. விரைவில் விஜய்யின் சம்பளம் பற்றிய செய்தியும் வெளியிடுகிறோம்.
Loading...