ஜப்பானில் உள்ளங்கை மற்றும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும் பயிற்சிகள் பண்டையக் காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த முறையின் மூலம் உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே அதை சரி செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதை தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவங்க வாழ்க்கையிலும் மாயாஜாலம் பண்ணிடுங்க…
01-கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தத்தை குறைத்து, நல்ல உறக்கம் ஏற்படுத்துகிறது.
மேலும் இந்த கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைந்துள்ளதால், இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
02-ஆள்காட்டி விரல்
பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது தான் ஆள்காட்டி விரல். இந்த ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்து வருவது மிகவும் நல்லது.
ஏனெனில் அது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. எனவே இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கவும், நீர்வறட்சி ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
03-நடுவிரல்
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்து வந்தால், அது கோபத்தை குறைத்து, தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இந்த நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைந்துள்ளதால், இது உடலின் சக்தியை ஊக்குவிக்கிறது.
03-மோதிரவிரல்
மோதிரவிரல், கட்டை விரலுடன் ஒத்துப் போவது தான். எனவே இந்த மோதிர விரலில் அழுத்தம் கொடுப்பதால், அது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்கிறது.
மேலும் இந்த மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளதால், இது சுவாசக் கோளாறுகள், நரம்பு மண்டலம், தசைகள் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
04-சிறுவிரல்
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், அது இதயம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு நல்லது. ஏனெனில் இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்தி, எண்ணம், சிந்தனை, கவனம் ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்கிறது.
05-உள்ளங்கை
நமது உள்ளங்கையில் அழுத்தம் கொடுப்பதால், அது மன அழுத்தத்தை குறைத்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவில் விடுபட உதவுகிறது.