அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் பின் லேடன் கொலை செய்யப்பட்ட போது அமைதியாக இருந்த ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை அரச படையினர் மீது குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அமெரிக்க கடற்படையினர் பின்லேடனை கொலை செய்த போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
எனினும், கொடூரமான பயங்கரவாதிகளை அழித்த இலங்கை அரச படையினர் மீது போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்துவது சர்ச்சைக்குரிய விடயமாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானம் இலங்கையின் இறைமையை மலினப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பயங்கரவாத்தை இல்லாதொழிக்க 29000 படையினர் உயிர்தியாகம் செய்துள்ளனர் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.