தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். தொகை வரவு திருப்தி தரும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கூட இருப்பவர்களால் தொல்லை ஏற்படலாம். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். மாலையில் மகிழ்ச்சி பயணமொன்று உண்டு.
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்யம் சீராகி ஆனந்தபடுத்தும். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
பணியாளர் தொல்லை அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க் கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித் திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொரு ளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர்.
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். வீடு வாங்கும்யோகம் உண்டு. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல்– கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்துதவுவர். பயணத்தால் பலன் உண்டு.
சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.